
சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது ஜெய்க்கும், நடிகை அஞ்சலிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்பட்டது.
இதை கேட்டு கொதித்த அஞ்சலி, ஜெய் வேண்டும் என்றே வதந்தியைப் பரப்புகிறார், இனி அவருடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என்றார்.
அதற்கு ஜெய், நான் எந்த நடிகையையும் காதலிக்கவில்லை. எந்த நடிகையையும் மணக்க மாட்டேன் என்றார். இந்நிலையில் ஜெய் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே அஞ்சலி டோலிவுட் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். அம்மணி தற்போது தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்து:
கருத்துரையிடுக