புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனிலுள்ள ஏதெர்டன் நகரில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் ரத்தக் காயங்களுடன் ஜேட் ஆண்டர்சன்(Jade Anderson) என்ற 14 வயது சிறுமி இறந்துக் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் சென்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


சிறுமியின் மரணம் குறித்து பொலிசார் விசாரணை செய்தபொழுது ஐந்து நாய்கள் அச்சிறுமியை துரத்தி வந்துள்ளதாகவும், அந்த நாய்களுடன் அச்சிறுமி தனியாக போராடியிருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் நாயின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் மார்க் கென்னி(Mark Kenny) கூறுகையில், இந்தச் சிறுமியின் பரிதாப மரணம் கேட்டு அவர்களின் குடும்பத்தினர் எப்படி தவித்துப் போயிருப்பார்கள் என்று தாம் கவலைபடுவதாகத் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top