புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் விபத்தில் சிக்கி தனியாக தைரியமாக போராடி தன்னைக் காப்பாற்றிக் கொண்ட 9 வயது சிறுமி
அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
கலிபோர்னியா நெடுஞ்சாலையில் அலிஜேந்த்ரா (35) என்பவர் தனது 9 வயது மகள் சீலியா ரென்டேரியாவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் 200 அடி பள்ளத்தாக்கிற்குள் உருண்டு விழுந்ததில், அடிபட்டு அலிஜேந்திரா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
ஆனால் அவரது மகள் நசுங்கி கிடந்த அந்த வண்டியிலிருந்து தவழ்ந்து வெளியே வந்தாள். முட்புதர்கள் நிறைந்த கரடு முரடான பாதையின் வழியே செங்குத்தான பள்ளத்தாக்கில் ஏறி நடு இரவு 2.30 மணியளவில் நெடுஞ்சாலைக்கு வந்து உதவி கோரினாள்.
அவ்வழியே வந்த ஒருவர் உடனடியாக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தவுடன், விரைந்து வந்த மீட்புப் படையினர் அந்த சிறுமியை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு விபத்து குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கலிபோர்னியா நெடுஞ்சாலைத்துறை காவல்துறை அதிகாரி, பெரும் விபத்தில் சிக்கியும் மனம் தளராமல், உதவி தேடி தனியாக, தைரியமாக நடுஇரவில் நடந்து வந்த அந்த 9 வயது சிறுமியின் தைரியத்தை வெகுவாக பாராட்டினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top