புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தெற்கு லண்டனிலுள்ள க்ரோண்டன்(Croydon) நகரில் ஒரு தாய் தனது மூன்று வயது குழந்தையைத் தள்ளு வண்டியில் வைத்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.


தன் குழந்தையை வீட்டு வாசலின் நடைபாதையில் தள்ளுவண்டிக்குள் வைத்து விட்டு ஒரு பொருளை எடுக்க மீண்டும் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது வீசிய பயங்கரமான சூறைக்காற்று குழந்தையிருந்த தள்ளுவண்டியை சாலைக்கு உருட்டி சென்றது.

அந்நேரத்தில் அதன் வழியே வந்து கொண்டிருந்த மெர்செடிஸ் ஸ்பிரிண்ட்டர்(Mercedes Sprinter) வானுக்கு கீழே குழந்தை பறந்து போய் அதன் சக்கரத்தில் சிக்கி கொண்டது.

வேன் ஓட்டுநருக்கு நிலைமை புரிவதற்கு முன்னரே கார்ச் சக்கரத்தில் நசுங்கி குழந்தை மரணமடைந்து விட்டது.

வானை பிரேக் போட்டு நிறுத்திய ஓட்டுநர் வண்டியை விட்டு இறங்கி வந்து பார்த்தபொழுது குழந்தை ரத்தவெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.

உடனே சம்பவ இடத்துக்கு அவசர மருத்துவ ஊர்தி வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள தூய ஜார்ஜ் மருத்துவமனைக்கு குழந்தை எடுத்துச் செல்லப்பட்டது. குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வான் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மே மாதம் விடுதலை பெறுவதற்கான பிணையினை பெற்றுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top