புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வானியல் நிகழ்வுகளில் ஒன்றான சந்திர கிரகணம் நேற்று அதிகாலை சுமார் 27 நிமிடங்கள் வரை நீடித்தது, இதனை ஏராளமானோர் ஆர்வமுடன்
கண்டு ரசித்தனர்.

சூரியக்குடும்பத்தில் உள்ள சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி பூமியின் மீது பட்டு அதன் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுவது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.


இந்த நிகழ்வு நேற்று அதிகாலை 1. 24 மணி முதல் 1.51 மணி வரை சுமார் 27 நிமிடங்கள் வரை நீடித்தது. சரியாக 1.34மணிக்கு உச்ச கட்டத்தை எட்டிய சந்திர கிரகணத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் தொலைநோக்கிகள் மூலமாக கண்டு ரசித்தனர்.

மேலும், 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது குறுகிய பகுதி சந்திர கிரகணமாக அழைக்கப்பட்ட இந்த நிகழ்வு ஆசியா மட்டுமல்லாது ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களின் பெரும்பாலான நாடுகளில் தெரிந்தது. இதற்கு அடுத்த முக்கிய நிகழ்வாக வரும் 28 ஆம் தேதி சனி கிரகம் நேர் எதிர் அமைவாக வரவுள்ளதாக பிர்லா கோளரங்க செயல் இயக்குநர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top