புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவூதி அரேபியாவில் உள்ள தபூக் நகர் வீடொன்றுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்றிருந்த அம்பாறையின் அக்கரைப்பற்று வேலாமரத்து வெளியைச் சேர்ந்த ஹஸைன் சித்தி
சபிலா வயது 22 என்ற யுவதி வீட்டு எஜமானியால் துன்புறுத்தப்பட்டு, உடலில் காயங்களுடன் நாடு திரும்பி, தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 6ம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த 10 மாதங்களாக வீட்டுக்குப் பணமோ, தன்னைப் பற்றிய தகவல்களோ அனுப்படாத நிலையில், பெற்றோர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக 10 மாதங்களின் பின் எஜமானியின் நடவடிக்கைகள் பற்றி தான் அறிந்து கொண்டதாகவும்,

வீட்டுக்கு எனது சம்பளத்தை அனுப்பாமல் ஏமாற்றி உள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டதாகவும், அதன் பின்னர் தனக்குரிய சம்பளத்தை வழங்குமாறு எஜமானியிடம் கேட்ட போது தன்னைக் கடுமையாக துன்புறுத்தி உடலில் காயங்களையும் ஏற்படுத்தியதாகவும் சித்தி சபிலா தெரிவித்துள்ளார்.

பெற்றோர் எடுத்துக் கொண்ட முயற்சியினாலேயே நாடு திரும்பியதாகவும் தன்னை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சப் ஏஜென்ஸி சவூதிக்கு அனுப்பியதாகவும் சபிலா தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top