புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐபிஎல் 6வது தொடரில் மும்பையில் நடைபெற்ற போட்டியில் சொந்த மண்ணில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மும்பை இந்தியன்ஸ் அணி விஸ்வரூபமெடுத்து விளையாடியதால் 58 ரன்கள்
வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் டெண்டுல்கரும் களம் இறங்கினர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ராம்பால் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 7 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ். 2வது ஓவரை ஆர்.பி.சிங் வீசினார். இந்த ஓவரில் 5 ரன்களை எடுத்திருந்தது. 3வது ஓவரின் முதல் பந்தில் டெண்டுல்கர் ஒரு பவுண்டரி விளாசினார்.. 5 பந்துகளில்ல் அவர் 11 ரன்களை எடுத்திருந்தார். ஆஹா!டெண்டுல்கரின் அதிரடி தொடங்கிவிட்டதே என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். இதே ஓவரில் 4வது மற்றும் 5 வது பந்தில் டெண்டுல்கர் அபாரமாக அடுத்தடுத்த பவுண்டரிகளை விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. இந்த ஓவரில் மட்டும் 16 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்தது.
23 ரன்னில் டெண்டுல்கர் அவுட்
4வது ஓவரை ஆர்.பி.சிங் வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் டெண்டுல்கர் அவுட் ஆனார். அவர் 13 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ஸ்மித்துடன் தினேஷ் கார்த்திக் இணைந்து கொண்டார். 4வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை எடுத்தது அந்த அணி. 5வது ஓவரை ஜெய்தேவ் வீசினார். இந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் சற்றே ரன்களை எடுக்க தடுமாறியது போல் தெரிந்தது. ஆனால் 4வது பந்தை ஸ்மித் பவுண்டரிக்கு பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார்.. 5வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களை எடுத்தது மும்பை அணி.
6வது ஓவரை வினய்குமார் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 14 ரன்களை அடித்து அரைசதத்தை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. 6வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்திருந்தது.7வது ஓவரை மொஹம்மத் வீசினார். 7வது ஓவரின் முடிவில் 59 ரன்களை எட்டியது. 8வது ஓவரை ஜெய்தேவ் வீசினார். அவரது முதல் பந்தை சிக்சருக்கு தட்டிவிட்டார் தினேஷ் கார்த்திக். இந்த ஓவரில் கூடுதலாக 8 ரன்களை எடுத்தது மும்பை அணி.
வினய் குமாரின் பந்துகளை சிதறடித்த ஸ்மித்- ஒரே ஓவரில்19 ரன்கள்
9வது ஓவரை வினய்குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஸ்மித் மீண்டும் சிக்சருக்கு அனுப்பி வைத்தார். ஸ்மித் அடுத்த பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார்.3வது பந்தில் ரன் ஏதும் எடுக்காத ஸ்மித் 4வது பந்தை மீண்டும் சிக்சருக்கு அனுப்பி வைத்தார். 5வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் மேலும் 2 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுக்கப்பட்டன. 9வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.
அரைசதம் எட்டிய ஸ்மித் அவுட்
10வது ஓவரை ஜெய்தேவி வீசினார். அவரது முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ஸ்மித். 5வது பந்தில் ஸ்மித் அரை சதத்தை எட்டினார். ஐபிஎல் தொடரில் இது அவரது 3வது அரைசதமாகும். 35 பந்துகளில் அவர் அரைசதத்தை எட்டினார். 10 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 97ரன்களை எடுத்தது. 11வது ஓவரில் மொஹம்மத் வீசிய முதல் பந்தில் அவுட் ஆனார் ஸ்மித். களத்திலிருந்த தினேஷ் கார்த்திக்குடன் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து கொண்டார். அவர் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால் மும்பை அணி 100 ரன்களைத் தாண்டியது. இந்த ஓவரின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்தது.
ரோஹித் அவுட்
12வது ஓவரை ராம்பால் வீசினார். இந்த ஓவரின் முடிவில் 110 ரன்களை எடுத்ததது மும்பை இந்தியன்ஸ் அணி. தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். ரோஹித் சர்மா 6 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்தார். 13வது ஓவரில் மொஹம்மத் வீசிய பந்தில் ரோஹித் சர்மா அவுட் ஆனார். அவர் 8 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்களை எடுத்திருந்தார். இதில் 1 பவுண்டரி அடங்கும். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 118 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் பொல்லார்டு களமிறங்கினார். இந்த ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 14வது ஓவரை ஜெய்தேவ் வீசினார். மும்பை அணியின் ரன் குவிப்பு ஸ்மித் அவுட்டுக்குப் பிறகு குறைவாக இருக்கிறதே என்ற ஆதங்கத்தை 14வது ஓவரின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை எட்டியது மும்பை அணி. இதேபோல் 15வது ஓவரில் மொஹம்மதின் முதல் பந்தை அபாரமாக சிக்சருக்குப் பறக்கவிட்டு ரசிகர்களைத் துள்ள வைத்தார் பொல்லார்டு. இதேபோல் கடைசி பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார் பொல்லார்டு. இந்த ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களைக் குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

பொளந்து கட்டிய பொல்லார்டு!
16வது ஓவரை மீண்டும் வினய் குமார் வீசினார். அவரது முதல் பந்தை தினேஷ்கார்த்திக் பவுண்டரிக்கு அனுப்பி வைக்க மும்பை ரசிகர்களிடம் உற்சாகம்கரை புரண்டோடியது. தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 39 ரன்களுடனும் பொல்லார்டு 8 பந்துகளில் 18 ரன்களுடனும் இருந்தார். இந்த ஓவரின் 2வது பந்தில் 150 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஓவரின் முடிவில் 151 ரன்களை எட்டியது மும்பை அணி. 17வது ஓவரில் ஆர்.பி.சிங் வீசிய 2வது பந்தை பொல்லார்டு பவுண்டரிக்கு அனுப்பினார். பொல்லார்டு 9 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்களைக் குவித்தார். அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பினார். ஆர்.பி.சிங்கின் 5வது பந்தையும் பவுண்டரிக்குத் தட்டிவிட்டார். 6வது பந்தில் 1 ரன் எடுத்தார். 17வது ஓவரின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 168 ரன்களை எட்டியது.
தினேஷ்- அம்பாத்தி - பொல்லார்டு அடுத்தடுத்து அவுட்
18வது ஓவரை மீண்டும் வினய் குமார் வீசினார். இந்த ஓவரின் 2வது பந்தில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். அவர் 33 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும். களத்தில் இருந்த பொல்லார்டுடன் அம்பாத்தி ராயுடு இணைந்து கொண்டார். அவர் வந்த வேகத்தில் ரன் அவுட் ஆனார். 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. பொல்லார்டுடன் ஹர்பஜன்சிங் இணைந்தார். ஆனால் இம்முறை பொல்லார்டு அவுட் ஆனார். மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் என்ற நிலையிலிருந்தது.
ஹர்பஜனும் அபாரம்! ஒரு ஓவரில் 3 பவுண்டரிகள்!
19வது ஓவரை ஆர்.பி.சிங் வீசினார். களத்தில் ஹர்பஜனும் ஜான்சனும் இருந்தனர். இந்த ஓவரின் 2வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ஹர்பஜன்சிங். 5வது பந்தை மீண்டும் ஹர்ஜனசிங் பவுண்டரிக்கு அனுப்ப மும்பை அணியின் ஸ்கோர் 182ஆக உயர்ந்தது. அடுத்த பந்தையும் ஹர்ஜபன் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 19வது ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களைக் குவித்தது. 20வது ஓவரை ராம்பால் வீசினார். இவரது 2 பந்தை எதிர்கொண்ட ஹர்பஜன் காட்ச் கொடுத்து அவுட் ஆனார். 8பந்துகளை எதிர்கொண்ட ஹர்பஜன் 3 பவுண்டரிகள் அடித்து 16 ரன்களை எடுத்திருந்தார்.அப்போது மும்பையின் ஸ்கோர் 187 ஆக இருந்தது. பின்னர் ஜான்சனுடன் மலிங்கா இணைந்து கொண்டார். இந்த ஓவரின் 4வது பந்தில் ஜான்சன் ஒரு சிக்சர் அடிக்க 193 ரன்களை எட்டியது மும்பை அணி. அடுத்த பந்தில் மேலும் ஒரு ரன் அடிக்க 194 என்ற நிலையில் இருந்தது. கடைசி பந்தில். ரன் ஏதும் எடுக்காததால் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களைக் குவித்தது. மும்பை அணியின் ஜான்சன் 5 பந்துகளில் 9 ரன்களுடனும் மலிங்க ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
தொடக்கத்தில் பெங்களூர் ரொம்ப தடுமாற்றம்
இதனால் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக சாதனைப் புயல் கெய்லும் தில்ஷானும் களம் இறங்கினர். கடந்த போட்டியில் அனேக சாதனைகளைப் படைத்திருந்த கெய்ல் இந்தப் போட்டியில் அதுவும் நல்ல சேஸிங் வாய்ப்புள்ள போட்டியில் எப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. முதல் ஓவரை மும்பையின் ஜான்சன் வீசினார். இவரது 5வது பந்தில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார் கெயில். இந்த ஓவரின் முடிவில் 5 ரன்களை எடுத்திருந்தது பெங்களூர்.2வது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரன்களை எடுக்க ரொம்பவே தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் கடைசி பந்தை தில்ஷான் பவுண்டரிக்குத் தட்டிவிட்டார். 2வது ஓவரின் முடிவில் 10 ரன்களை மட்டுமே எடுத்தது.
3வது ஓவரை மீண்டும் ஜான்சன் வீசினார். அவரது முதல் பந்தை புயல் கெய்ல் அற்புதமாக சிக்சருக்கு அனுப்பி தனது வேட்டையைத் தொடங்கினார். மைதானமே ஆராவாரத்தில் திளைத்ததது. ஆனால் 3வது பந்தையில் லேசாக தூக்கி அடித்த பந்தை போட்டிப் போட்டுக் கொண்டு பிடிக்க பாய்ந்த மும்பை வீரர்கள் கோட்டை விட்டதால் 'தல' தப்பியது. 6வது பந்தை வழக்கம் போல தலைக்கு மேலே ஒரு சின்ன தட்டு..அது பவுண்டரிக்குப் போய்விழுந்தது. இந்த ஓவரின் முடிவில் பெங்களூர் அணி 22 ரன்களை எடுத்தது. கெய்ல் 8 பந்தில் 9 ரன்கலையும் தில்ஷான் 10 பந்தில் 9 ரன்களையும் எடுத்திருந்தனர். 4வது ஓவரை மலிங்கா வீசினார். அவரது முதல் பந்தில் தில்ஷான் 2 ரன்கள் அடித்தார். அடுத்து ஒரு ரன் அடித்தார் தில்ஷான். பின்னர் மலிங்காவின் 4 பந்துகளை எதிர்கொண்ட கெய்ல் எந்த ஒரு ரன்னையும் அடிக்கவில்லை. அவர் 12 பந்துகளில் 9 ரன்களுடனும் தில்ஷன் 12 பந்துகளில் 12 பந்துகளுடனும் இருந்தார். 5வது ஓவரை ஜான்சன் வீசினார். இந்த ஓவரில் 4வது பந்தில் ஒரு பவுண்டரியை விளாசினார் கெய்ல். 6வது பந்தையும் கெய்ல் பவுண்டரிக்கு அனுப்ப 5 ஓவர் முடிவில் 34 ரன்களை எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
முடக்கிய மும்பை! தில்ஷான், கெய்ல், கோஹ்லி, டிவில்லியர்ஸ் அவுட் - 43/4
6வது ஓவரை குல்கர்னி வீசினார்.இந்த ஓவரிலும் ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது பெங்களூர். இந்த ஓவரின் 4வது பந்தில் தில்ஷான் அவுட் ஆனார். அவர் 18 பந்துகளில்13 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகள் அடங்கும் . ரன்குவிக்க முடியாமல் திணறிய கெயிலுடன் கோஹ்லி இணைந்தார். 7வது ஓவரை ஹர்பஜன் வீசினார். 3வது பந்தில் கெயில் 1 ரன் எடுத்தார். 4வது பந்தில் கோஹ்லி 1ரன் எடுத்தார்.5வது பந்தை எதிர்கொண்ட கெய்ல் அழகாக உயரத் தூக்கி அடிக்க அதை மிகச் சரியாக பவுண்டரி லைனில் ராயுடு கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். பெரும்நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட கெயில் 20 பந்துகளில்18 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதில் 2 பவுண்டர்களில் 1 சிக்சர் அடங்கும். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்களை எடுத்திருந்தது.
களத்தில் 1 ரன்னுடனிருந்த கோஹ்லியுடன் டிவில்லியர்ஸ் இணைந்தார். 7 வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களையே பெங்களூர் அணி எடுக்க முடிந்தது. அடுத்த ஓவரை குல்கர்னி வீசினார். இந்த ஓவரில் கோஹ்லி அவுட் ஆனார். பெங்களூர் அணி தமது முதல் 8 ஓவரில் 39 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டை பறிகொடுத்தது. களத்தில் இருந்த டிவில்லியர்ஸுன் திவாரி இணைந்தார். ஆனால் டிவில்லியர்ஸ் 2 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். அப்போது மும்பை அணி 43 ரன்களைத்தான் எடுத்தது. பின்னர் அருண் கார்த்திக் திவாரியுடன் இணைந்தார். நொந்து போய் கிடந்த ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் 9வது ஓவரில் ஹர்பஜ்னசிங்கின் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார் திவாரி. இதனால் ஒருவழியாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி 50 ரன்களைத் தாண்டியது. 9வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்களைத்தான் பெங்களூர் எடுததது.
67 ரன்னில் 5வது விக்கெட் அவுட்
பின்னர் 11வது ஓவரின் 3வது பந்தை ஹர்பஜன் வீச அருண் கார்த்திக் அதில் அவுட் ஆனார். அப்போது அந்த அணி 67 ரன்களைத்தான் எடுத்திருந்தது. பின்னர் மொஹம்மது, திவாரியுடன் இணைந்து கொண்டார். 11வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்து பெங்களூர் அணி.
12வது ஓவரை மலிங்கா வீசினார். மலிங்காவின் 2வது பந்தில் மொஹம்மத் பவுண்டரியை வீசினார். இந்த ஓவரின் முடிவில் 79 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி.
விக்கெட்டுகள் தொடர்ந்து சரிவு- தோல்வி உறுதி
13வது ஓவரின் தொடக்கத்தில் 48 பந்துகளில் 117 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்கு பெங்களூர் அணிக்கு இருந்தது. 5 விக்கெட்டுகள் மளமளவென சரிந்துபோய்விட்ட நிலையில் இந்த ஸ்கோரை பெங்களூர் அணியால் எட்ட முடியுமா? என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருந்தது. இந்த நிலையில் 14வது ஓவரின் 2வது பந்தில் திவாரியும் அவுட் ஆனார். அவர் 19 பந்தில் 21 ரன்களை எடுத்திருந்தார்.13.2வது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எடுத்தது. களத்தில் இருந்த மொஹம்மதுடன் ரவி ராம்பால் இணைந்தார். ஆனால் 14வது ஓவரின் 5வது பந்தில் மொஹம்மது அவுட் ஆனார்.
அவர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 85 ரன்களையே எடுத்தது. பின்னர் வினய் குமார் இணைந்து கொண்டார்.15வது ஓவரை பொல்லார்டு வீசினார். இந்த ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 94ரன்களை மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எடுத்தது. இருப்பினும் குறைவான பந்துகளில் 100 ரன்களுக்கும் மேல் எடுக்க வேண்டிய நிலை இருந்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தோல்வி உறுதியானது.
கடைசி ஓவர்களில் நிலைத்த வினய்குமார்- ராம்பால்
ஒருவழியாக 16வது ஓவரின் முடிவில் 102 ரன்களை எட்டியது. அப்போது 24 பந்துகளுக்கு 93 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை இருந்தது பெங்களூர் அணிக்கு.
கடைசி 2 ஓவர்களில் 85 ரன்கள் தேவை.. வெல்ல முடியாததுதான்..ஆனால் தோல்வி வித்தியாசத்தை சற்றே குறைக்க போராடியது . கடைசி ஓவரில் 6 பந்தில் 71 ரன்கள்... ஆனால் 20வது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ர்ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால்!. அந்த அணியின் ராம்பால் 18 பந்துகளில் 23 ரன்களுடனும் வினய்குமார் 20 பந்துகளில் 26 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
மும்பை அணியின் விஸ்வரூபத்தால் 58 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது!

1 கருத்து:

 
Top