புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் 1934 முதல் 1945 வரை ஜெர்மனியை ஆட்சி செய்தார். இவர் 1945 ஏப்ரல் 30-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரின் ஆட்சிக்கு எதிராக
போராடியவர்கள் இவரை கொல்ல பல முறை திட்டம் தீட்டினர்.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரிடம் பணிபுரிந்த மார்கட் வோலக் என்ற பெண்மணி 50 வருடங்களாக வெளி உலகுக்கு சொல்லாமல் வைத்திருந்த தனது அனுபவங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

95 வயதாகும், அந்தப்பெண் தனக்கு 25 வயது இருக்கும் போது ஹிட்லரிடம் இரண்டரை வருடம் பணிபுரிந்ததாக கூறியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் நரியின் குகை (வுல்ப்ஸ் லேர்) என்று பெயரிடப்பட்ட ராணுவ தலைமை அலுவலகத்தில் தங்கி இருந்தார். இந்த இடம் தற்போது போலந்து நாட்டில் உள்ளது. அங்கு மார்கட் வோலக் ஹிட்லரிடம் பணிபுரிந்தார்.

அந்த அனுபவம் குறித்து மார்கட் கூறியதாவது:-

ஹிட்லர் ஒரு சைவ உணவு பிரியர். நான் அவரிடம் பணிபுரிந்த காலத்தில் அவர் அசைவம் சாப்பிட்டதில்லை. இங்கிலாந்து அரசு தனக்கு விஷம் வைத்து கொன்று விடும் என்று ஹிட்லர் பயந்தார். அதனால் அவர் சாப்பிடும் உணவுகளில் விஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, 15 பெண் பணியாளர்களை வைத்திருந்தார்.

அந்த உணவை ஹிட்லர் சாப்பிடும் முன் சாப்பிட்டு விஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதே அவர்களின் வேலை. அதில் நானும் ஒருத்தி. உணவுகளில் விஷம் கலந்திருக்கலாம் என்ற பயம் எங்களுக்கு இருக்கும். உணவுகள் மிக சுவையாக தயாரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் மரண பயம் காரணமாக நாங்கள் நிம்மதியாக சாப்பிட்டதே இல்லை. ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போது இதுதான் நமது கடைசி உணவாக இருக்கும் என்று பயந்து நடுங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவர் 1917-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் பிறந்தார். இவருக்கு தற்போது வயது 95 என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top