புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 இங்கிலாந்தின் ரோட் தீவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்டுள்ளார்.


டேவிட் கிரேஸர் என்ற 47 வயதான ஆங்கில ஆசிரியர் ஒருவரே இந்த விநோதமான பூச்சி இனங்களை உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
தற்போது தன்னிடம் 20 இனங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் பூச்சிகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார் டேவிட்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எனது குளிரூட்டியில் சின்னப் பசியெடுக்கும் வேளைகளில் சாப்பிட தேள், கரப்பான் பூச்சி உட்பட 12 ஆயிரம் பூச்சிகளை சேமித்து வைத்துள்ளேன்.


இது தவிர வண்டுகளையும் நான் சாப்பிடுவேன். நான் பிரபல்யமற்றவனாக இருக்கும் போது இப்பழக்கத்தினால் என்னை பலர் பைத்தியக்காரன் என்றெல்லாம் கூறினார்.

உண்மையில் சாதாரண உணவுகளை விட பூச்சி மற்றும் வண்டுகளில் அதிகளவான விட்டமின்கள் மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகவும் சுவையானது எனவும் வாதாடுகிறார் ஆசிரியர் டேவிட்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top