புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த இரு பெண்களுக்கு 06 மாத சிறைத்தண்டனை மற்றும் 60ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை மற்றும் பாலையடிவட்டை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் பெறுமதி வாய்ந்த மதுப்போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.சாந்தகுமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் இருவரையும் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது திக்கோடையை சேர்ந்தவருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பாலையடிவட்டையை சேர்ந்தவருக்கு ஏற்கனவே இரு வழக்குகள் உள்ளபடியால் 60ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதல் நிலையில் உள்ளமைக்கு மதுபாவனை அதிகரித்துச் செல்வதும் காரணமாக கொள்ளப்படும் நிலையில் இவ்வாறான சட்ட விரோத மதுவிற்பனை செய்யும் இடங்கள் தொடர்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top