புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த கொடூர விபத்தில் சிக்கிய தம்பதி, ஒருவரை ஒருவர்
பயத்தில் அணைத்தபடியே உயிரிழந்திருக்கும் புகைப்படம் ஒன்று காண்போரின் மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது.

வங்கதேச தலைநகர் டாக்கா அருகில் உள்ள சாவர் பகுதியில் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் இயங்கி வந்த, 8 அடுக்கு கட்டிடம் ஒன்று கடந்த மாதம் 24 ஆம் தேதி இடிந்து விழுந்தது.

இவ்விபத்தில் சிக்கி ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்ப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஒரு தம்பதியின் புகைப்படம் மனதை காயப்படுத்துகிறது.

அந்த புகைப்படத்தில், ஒரு தம்பதி கட்டிடம் இடிந்தபோது, ஒருவரை ஒருவர் பயத்தில் அணைத்தபடியே இறந்துள்ளனர். இவர்களின் பாதி உடல் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் நிலையில், அந்த ஆணின் கண்ணிலிருந்து ரத்தம் வழிவது காண்போரின் மனதை ரணமாக்குகிறது.

வங்கதேசத்தை சேர்ந்த டாஸ்லிமா அக்தர் (Taslima Akhter) என்னும் புகைப்பட கலைஞரால் டைம்ஸ் பத்திரிக்கையின் 'Light Box' பகுதிக்காக இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்புகைப்படம் இந்த வார டைம்ஸ் இண்டர்நேஷனல் பத்திரிகையில் டேவிட் வோன் ரேஹ்லே (David Von Drehle) என்பவின் கட்டுரையோடு வெளி‌யிடபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top