புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆபில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் சுற்று கொல்கத்தாவில் நேற்றிரவு மழையின் காரணமாக தாமதமாக தொடங்கி நடைபெற்றது. இதில் மும்பை
இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் டிராவிட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் டிராவிட்டும், ரஹானேவும் நிதானமாகி விளையாடினர். அதில் ராகுல் 43 ரன்களிலும், ரஹானே 21 ரன்களில் அவுட்டாயினர். அடுத்து வாட்சன் 6 ரன்னில் அவுட் ஆனது ராஜஸ்தான் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்று முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் ஹர்பஜன் சிங் எடுத்தார்.

பின்னர் சிறப்பாக விளையாடிய பின்னி 27 ரன்னில் ஹர்பஜனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6-வது வீரராக வந்த ஹாட்ஜூம் நிதானமாக விளையாட, அவருடன் ஜோடி சேர்ந்த யாக்னிக் அதிரடியாக விளையாடி 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

166 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் ஸ்மித் மற்றும் தரெ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். ஸ்மித் 62 ரன்களிலும், தரெ 35 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.

மூன்றாவதாக களம் இறங்கிய கார்த்திக் 22 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. கடைசியாக இரு பந்துகளுக்கு ஒரு ரன் எடுக்க வேண்டியநிலையில் ஆடிய ஹர்பஜன் சிங் 4 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட்ட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. போட்டியின் ஆட்ட நாயகனாக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தாவில் சந்திக்கிறது.
 
Top