புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குவைத் நாட்டு நீதிமன்றம் அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவருக்கு நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த போலீஸ் அதிகாரி, தமது ஸ்டேஷனில் பணிபுரிந்த சக போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிவிட்டார் என்பதே குற்றச்சாட்டு.


தண்டனை விதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியின் வக்கீல், “துப்பாக்கியால் சுட்டபோது எனது கட்சிக்காரர் நிதானமான மனநிலையில் இருக்கவில்லை. மனத் தடுமாற்றத்தில் நடந்த கொலை இது” என்று முன்வைத்த வாதத்தை குவைத் கோர்ட் நிராகரித்து விட்டது.

குவைத்தில் காடிசியா பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி, தற்போது தண்டனை பெற்றவர், மேலும் சில போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்தபோது அங்கிருந்தனர்.

அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் இரவு உணவை பகிர்ந்து உண்டபோது, இரு அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஒரு அதிகாரி, அனைவருக்கும் டீ எடுத்து வருவதற்காக வாக்குவாதத்தை பாதியில் நிறுத்திவிட்டு டீ-ரூமை நோக்கிச் சென்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் டீ-ரூமை நோக்கி சென்ற மற்றைய அதிகாரி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த துப்பாக்கியை எடுத்து, டீ கொண்டுவர சென்றவரை சுட்டுவிட்டு, துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார் என சாட்சிகளின் வாக்குமூலத்தில் வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
 
Top