புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒடிசா மாநிலம் தியோகார் மாவட்டம், பாலிநல்லி கிராமத்தைச் சேர்ந்த ரிங்கி (வயது 11) என்ற சிறுமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் சேர்ந்து நேற்று முன்தினம், ஒரு வீட்டின் பின்புற தோட்டத்தில் இருந்த மாதுளை மரத்தில்
பழங்களை திருட்டுத்தனமாக பறித்துள்ளனர்.

பழங்களை திருடியதால் மாட்டிக்கொள்வோம் என்று ரிங்கி பயந்தார். ஆனால், இதனை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மற்ற சிறுமிகளின் தாயார்களான மோலி சாகு, சுலோச்சனா சாகு ஆகியோர் விரும்பினர்.

எனினும், செய்த தவறை நினைத்து தொடர்ந்து வருந்திய ரிங்கி, நடந்த சம்பவத்தை, பழம் பறித்த வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டார். எனவே, மற்ற சிறுமிகளின் குட்டும் வெளிப்பட்டது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த சிறுமிகளின் தாயார், நேற்று ரிங்கியின் வீட்டுக்கு வந்து ரிங்கியை தாக்கியதுடன், அவர் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது பாட்டி அங்கு வந்து, தீயை அணைத்தார்.

உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த ரிங்கி, மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top