புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ். மாவட்டத்தில் வீதி விபத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் இந்த
ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரையான 5 மாத காலப்பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்துக்களின் போது 21 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெவ்ரி தெரிவித்துள்ளார்.

யாழ் பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது. அதன் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட வீதி விபத்துக்களின்போது 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான 5 மாத காலப்பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் தற்போது வீதி புனரமைப்பட்டு காப்பட் போடப்பட்டுள்ளது. இதனால் பயணிப்பவர்கள் அதிக வேகத்துடன் செல்வதனால் வீதி விபத்துக்கள் அதிகளவு இடம்பெறுகின்றதுடன் உயிரிழப்புக்களும் அதிகமாக ஏற்படுகின்றது.

இந்நிலையில், வீதிகளில் பயணிப்பவர்கள் வேகக் கட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு பயணிக்க வேண்டும். மேலும் யாழ்ப்பாணத்தின் வாகன நெரிசல் உள்ள இடங்களில் ‘கலர் லைற்’பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வீதி விபத்துக் குறித்து அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அவர் மேலும் பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top