புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் தரம் 07 ல் கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் கடுமையாக பொல்லு ஒன்றினால் தாக்கியதனால் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட நிலையில்
குறித்த 12 வயது மாணவி வைத்தியசாலையில் சிகிசை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவியவருவதாவது

கடந்த வெள்ளிக்கிழமை (07-06-2013)  அன்று கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த நல்லதம்பி பிறையரசி என்ற தரம் 07 ல் கல்வி மாணவி பாடசாலைக்கு சென்று கல்விச் செயற்பாடுகளில் ஈடுப்பட்டிருந்த வேளை சித்திரம் கற்பிக்கும் ஆசிரியர் வகப்புக்குள் பிரவேசித்த போது அங்கு வகுப்பறையில் மாணவர்களின் மேசைகளில் எழுதப்பட்டிருந்த தொடர் இலக்கத்தில் இலக்கம் ஒன்று அழிக்கப்பட்டிருந்தது.

இதனை அவதானித்த குறித்த சித்திரபாட ஆசிரியர் மாணவர்களிடம் யார் அழித்தது என வினாவியுள்ளார். மாணவர்கள் கூற மறுத்ததனை தொடர்ந்து மேற்படி குறித்த மாணவி உள்ளிட்ட ஆறு மாணவர்களை மொத்தமான தடி ஒன்றினால் முழங்காலுக்கு கீழே கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.

இதன் போது குறித்த மாணவியின் காலின் பின்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் நடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மாணவியை உருத்திரபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் அங்கு சிகிசைக்கு அனுமதித்து பின்னர் அன்று மாலை ஐந்து மணியளவில் செல்வாநகரிலுள்ள மாணவியின் வீட்டிற்கு சக மாணவியுடன் அனுப்பி வைத்துள்ளார்.

வீடு சென்றடைந்த மாணவி நடக்க முடியாது துன்பப்பட்ட நிலையில் பெற்றோர்கள் காரணத்தை விசாரித்த போது மாணவி தனக்கு நடந்ததை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த தரம் 07 ல் கல்வி கற்கும் மாணவி தாக்கப்பட்ட அன்றுமுதல் மூன்று நாட்களாக நடக்க முடியாது பெரும் சிரமப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

காலின் எலும்புகள் பாதிக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தில் மேலதிக சிகிச்சைக்கு மாணவியை உட்படுத்த பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.

மேலும் இந்து கல்லூரியில் கல்வி கற்கும் செல்வாநகரைச் சேர்ந்த மாணவன் ஒருவனும் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டு காது கேட்காது இருப்பதாகவும் சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியரின் இந்த மோசமான நிலையினை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு ஏனைய பெற்றோர்களும் கடும் விசனமடைந்துள்ளனர்.

 மாணவர்களை ஆசிரியர்கள் இவ்வாறு மோசமாக கண்மூடித்தனமாக தண்டிப்பதனை நிறுத்த வேண்டும் எனவும், மேற்படி சிறுமியை தாக்கிய ஆசிரியருக்கு ஏதிராக கல்வித் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேணடும் எனவும் பெற்றோர்கள் கோருகின்றனர்.

எல்லா பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட சுற்று நிரூபம் ஒன்றின் படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தடியினால் அடிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.

இருப்பினும் இவ்வாறான ஆசிரியர்கள் தண்டனை என்ற பெயரில் கண்மூடித்தனமாக மாணவர்களை தண்டிப்பது சிறுவர் துஸ்பிரயோகமே என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top