புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஸ்வீடனில் ரயில்வே துறையில் பணிபுரியும் சுமார் 13 ஓட்டுனர்கள் சீருடை மீது விதிக்கபட்டிருக்கும் தடையை எதிர்த்து பெண்களைப் போல் பாவாடை அணிந்து கொண்டு வேலைக்கு செல்வது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமின் வடக்குப் பகுதியில் செயல்படும் ரோச்லக்ஸ்பனன் ரயில்வே பிரிவில் பணிபுரியும் ஓட்டுனர்கள் 13 பேர், கோடை காலத்தில் பேண்ட் அணிந்துகொள்வது கஷ்டமாக இருக்கிறது என்று நிர்வாகத்திடம் முறையிட்டு அரைபேண்ட் போட்டுக்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டிருந்தனர்.

ரயில்வே நிர்வாகம் அதற்கு அனுமதி அளித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் அரிவா நிறுவனம், இந்த பகுதி ரயில்வே துறையின் நிர்வாகப் பொறுப்பை ஜனவரி மாதம் முதல் ஏற்றுக்கொண்டுள்ளது.

அந்நிறுவனம், ஊழியர்கள் அரைபேண்ட் அணிந்து வேலைக்கு வருவது தங்களது நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்கும் என்று கூறி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

எனவே, ரயில் ஓட்டுனர்கள் கடந்த இரண்டு வாரங்களாக தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பெண்களைப் போல் பாவாடை அணிந்துகொண்டு வேலைக்கு வருகின்றனர்.

இதுதான் அவர்களது விருப்பம் என்றால் இது குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று அரிவா மேலாளர் தோமஸ் ஹெடினியஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோடைக் காலத்தில் பேண்ட் அணிந்து வேலை செய்வதென்பது கடினமான ஒன்று என்று தாங்கள் கூறியபோதும் நிர்வாகம் அதனை வற்புறுத்தியதால், வசதி கருதி ஸ்கர்ட் போட முடிவெடுத்தோம் என்று தெரிவித்த ஒரு ஓட்டுனர், மக்கள் தங்களை விநோதமாகப் பார்த்தாலும் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஆயினும் வசதி கருதி இதனை அணிவதால் தங்களுக்கும் வித்தியாசமாகத் தோன்றவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top