புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மத்திய ஐரோப்பிய நாடுகளில் பலத்த மழை பெய்து வருவதால், ஜேர்மன், ஹங்கேரி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில் கிழக்கு ஜேர்மனியில் உள்ள எல்பி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதன் காரணமாக அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை உடைந்தது.

இதனால் மெக்டே பர்க் நகருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், 24 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

வழக்கத்தைவிட 4 மடங்கு அதிகமாக தண்ணீர் தேங்கியிருப்பதால் அந்த நகரம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே அங்கிருந்த 25 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு அணையும் உடையும் நிலையில் உள்ளதால், அதனை பலப்படுத்தும் பணி நடக்கிறது.

இதற்கிடையே வெள்ளம் பாதித்த மெக்டேபர்க் நகர அதிபர் ஜோசிம் ஹவுக் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top