இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் உபயோகப்படுத்துவது யூடியுப் தளம்.தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இந்த தளத்தில் புதிதாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோக்களை பார்க்கின்றனர்.யூடிபில் நாம்
ஏதாவது வீடியோவை ஓபன் செய்தால் முதலில் அவர்களின் விளம்பரங்கள் வரும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும் அது வரை நாம் காத்துகொண்டு இருக்க வேண்டும். அந்த விளம்பரம் முடிந்த பிறகு தான் வீடியோவை காண முடியும்.
வீடியோ ஓடிக்கொண்டிருக்கும் பொழுதும் இடையில் இந்த விளம்பர வீடியோ தோன்றி எரிச்சலை உண்டாக்கும். இந்த பிரச்சினையை தீர்த்து யூடியூபில் எந்த விளம்பர தொல்லையுமின்றி வீடியோக்கள் காணலாம்.
இதற்கு ஒரு குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து உலாவியில் நிறுவிக் கொள்ளலாம். இதனை நிறுவியதும் யூடியுப் வீடியோவில் ஏதேனும் விளம்பரம் வந்தால் மேலே உள்ள சிறிய நீல நிற பட்டனை அழுத்தினால் அந்த விளம்பரம் தவிர்க்கப்பட்டு விடும்.
இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்து:
கருத்துரையிடுக