புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



  பார்ச்லோனா ஒலிம்பிக் போட்டி, 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டி, 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் ஓட்டப்பந்தய வீராங்கணையாக பங்கேற்றவர் சூசி பெவர் ஹாமில்டன்.


முதல் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிவாய்ப்பை தவறவிட்ட இவர், 2000-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறும் தகுதிவாய்ந்த வீராங்கணைகளில் ஒருவராக கருதப்பட்டார்.

எல்லைக்கோட்டை தொடுவதற்கு 150 மீட்டர் தூரமே இருந்த நிலையில், சுவாசக் கோளாறு ஏற்பட்டு மேற்கொண்டு ஓட முடியாமல், தடுமாறி விழுந்த சூசி பெவர் ஹாமில்டன் மூன்றாவது முறையும் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார்.

அதன் பின்னர் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் எதிலும் பங்கேற்காமல், திருமணம் செய்துக்கொண்டு 7 வயது பெண் குழந்தைக்கு தாயாக உள்ள ஹாமில்டன், குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொண்டு, உபரியாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

தற்போது, 44 வயதாகும் ஹாமிமல்டண், லாஸ் வேகாஸ் நகரில் எஸ்கார்ட் எனப்படும் மறைமுக விபசாரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், இதற்காக ஒரு மணி நேரத்திற்கு 600 அமெரிக்க டாலர்களை கூலியாக வாங்குவதாகவும் அமெரிக்காவின் பிரபல இணையதளம் ஒன்று, படங்களுடன் செய்தி வெளியிட்டது.

இதனை ஒப்புக்கொண்டுள்ள ஹாமில்டண், தனது டுவிட்டர் வலைப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

எனது திருமண வாழ்வில் ஏற்பட்ட தோல்வி மற்றும் விரக்தியை சரிசெய்துக்கொள்ளும் முயற்சியில் நான் தவறான பாதையில் சென்றுவிட்டேன். இது மிகப்பெரிய தவறு என்பது தெரிந்தே இதில் நான் ஈடுபட்டேன். என்னை யாரும் இந்த தொழிலில் பலியாக்கி விடவில்லை. எல்லாவற்றிற்கும் நானே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

இந்த விவகாரம், வெளியே யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என நான் கருதினேன். இப்போது நினைத்துப் பார்த்தால் நான் தவறான காரியத்தை செய்துவிட்டதாக உணர்கின்றேன். எனது செய்கையின் மூலம் காயப்பட்டவர்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்றே எனக்கு புரியவில்லை.

எனது குடும்பத்தாரின் அன்பைப் பெற என் தவறுகளை திருத்திக்கொள்ள நினைக்கின்றேன். ஒரு நல்ல தாயாக, மனைவியாக, மகளாக, தோழியாக எனது உறவுகளை புதுப்பித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top