வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள ஒலகடம் முமிரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் கோபால கிருஷ்ணன் (வயது 23). இவர்களது பக்கத்து வீட்டை
சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் நதியா (19). கோபாலகிருஷ்ணனும், லலிதாவும் அண்ணன்- தங்கை முறை என்று கூறப்படுப்படுகிறது. இருப்பினும் அவர்கள் அதை மறந்து காதல் கொண்டனர்.
இதை அவர்களது பெற்றோர் கண்டித்தனர். இருப்பினும் அவர்கள் தங்களது காதலை தொடர்ந்தனர். இது பற்றி போலீசில் ஏற்கனவே புகார் செய்யப்பட்டது. போலீசார் கோபால கிருஷ்ணன்- நதியாவை அழைத்து அண்ணன்- தங்கை முறையாக உள்ளதால் நீங்கள் சேர்ந்து வாழ்வதை சமூகம் ஏற்று கொள்ளாது என்று அறிவுரை கூறினர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கோபால கிருஷ்ணனும்- நதியாவும் வீட்டு விட்டு வெளியேறி பவானியில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி நதியாவின் தந்தை ராஜன் வெள்ளி திருப்பூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக