தன்னுடைய சகோதரியை கொலை செய்த கொலைக் குற்றவாளியை, திருமணம் செய்ய போவதாக பெண் ஒருவர் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அர்ஜென்டினாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் எடித் மற்றும் ஜோஹனா ஆவர். இவர்களில் ஜோஹனா கடந்த 2010ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இந்த வழக்கில் விக்டர் சிங்கோலானி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் விக்டரை, சகோதரிகளில் ஒருவரான எடித் திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார்.
இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இருப்பினும் விக்டரை மணக்கும் திட்டத்தை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார் எடித்.
என் காதலர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என கூறிய எடித், கடந்த 21ஆம் திகதி, காதலர் விக்டரை மணக்க தயாராக இருந்தார்.
பொதுமக்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடப்பதற்கு, அர்ஜென்டினா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடைசி நேரத்தில் திருமணம் நின்றதால் விக்டர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வருகிற 31ஆம் திகதி இந்த திருமணம் குறித்து, நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை அளிக்க உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக