பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோருவதற்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விஸ்வரூபம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஓடும் பஸ்சில் மாணவி பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டது தமக்கு மிகவும் அவமானமாக இருப்பதாகவும், ஆனால் அதற்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோருவது சரியான வழி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை என்பதே, சட்டரீதியான கொலை என்று கூறியுள்ள கமல்ஹாசன், பாலியல் பலாத்காரம் நடந்த பஸ் என்னுடையது, என்னுடைய தலைநகரம், கற்பழிக்கப்பட்டவர் எனது சகோதரி, கற்பழித்தவர்கள் எனது சகோதரர்கள். இதனால் நான் மிகவும் அவமானப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக