திரிபுரா மாநில தலைநகர், அகர்தலா அருகில் உள்ளது, பிஷால்கார். 37 வயது பெண் ஒருவர், வயலுக்கு சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தார். ஏழு பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது.
அவர்கள் பிடியிலிருந்து தப்பிய அந்த பெண், ஓடி வந்து, வீட்டில் நுழைந்து கொண்டார். அந்த பெண்ணை தேடிய கும்பல், வயல்வெளியில் அந்த பெண், பாலியல் தொழில் செய்தார் என, தவறாக கதை கட்டி விட்டுள்ளது.
இதை நம்பிய கிராமத்தினர், பெண்ணின் வீட்டை காண்பித்துள்ளனர். வீட்டில் புகுந்த கும்பல், அந்த பெண்ணை கற்பழித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பெண் திட்டியதால், கோபம் கொண்ட கும்பல், பெண்ணை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தது.
பாலியல் தொழில் செய்ததாக, தவறாக கூறப்பட்டதால், அந்த பெண் மீது, கிராமத்தினரும் கோபமாக இருந்தனர். கற்பழிப்பு கும்பலுடன் சேர்ந்து, கிராமத்தினரும், அந்த பெண்ணை, அருகில் இருந்த மரத்தில் நிர்வாணமாக கட்டி வைத்து, கடுமையாக அடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை பெற்ற பொலிசார், நேற்று முன்தினம், அந்த கும்பலை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஐந்து வயதில் குழந்தை உள்ளது; அவளின் கணவர் யார், சம்பவம் நடந்த போது, அவர் எங்கே சென்றிருந்தார் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக