தென்ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரை சேர்ந்த காரின் பென்னட்(63) என்ற பெண் கருப்பு நிற பூனைக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அதற்கு தபிதாஎன்று பெயரிட்டு இருக்கிறார்.சம்பவத்தன்று அவர் வீட்டிலுள்ள சலவை எந்திரத்தில் துணிகளை போட்டு அதை ஓட
விட்டார். இந்நிலையில் அவர் எந்திரத்தின் கண்ணாடி பகுதியை பார்த்த போது தனது பூனைக்குட்டியும் துணிகளுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விட்டார். இந்நிலையில் அவர் எந்திரத்தின் கண்ணாடி பகுதியை பார்த்த போது தனது பூனைக்குட்டியும் துணிகளுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே எந்திரத்தை நிறுத்தி அதை மீட்டுள்ளார். இந்த பூனைக்குட்டி சுமார் 2 மணி நேரம் சுற்றிச் சுழன்ற போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டது. தண்ணீருக்குள் கிடந்ததால் அது நடுங்கி கொண்டிருந்தது. பிறகு புனைக்குட்டியை உலர்த்தி அதற்கு சிகிச்சையும் அளித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக