புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தல, தளபதி படங்களுக்கு தலைப்பு வைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. தல அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்திலும் தளபதி விஜய் ஏ.எல்.விஜய் இயக்கத்திலும் நடிக்கின்றனர்.


தல படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆனால் தளபதி படத்திற்கு தலைவன் என்று தலைப்பை வைத்தார்கள். இது வேறொரு நபருடையது என்பதால் தலைப்புக்கு சொந்தக்காரர் உரிமை கொண்டாட இந்த தலைப்பை ஒதுக்கி விட்டார்கள்.

பின்னர் தங்க மகன் என்று வைக்க, இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் என்பதால் இதுவும் தோல்வியில் முடிந்தது.

படத்தின் இயக்குநர் திரைக்கதை, வசனம் கூட எழுதிவிடுவார் போல ஆனால் படத்தலைப்புதான் தலைவலியாக இருக்கிறது.

ஏற்கனவே துப்பாக்கி படத்தில் நேர்ந்த அனுபவம் விஜய் கூட்டணியை வெகுவாக யோசிக்க வைத்திருக்கிறது என்றே கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top