புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் ஐபோன்-5 ஸ்மார்ட்போனையும், ஐபேட் மினி டேப்லட்டை ஆகஸ்டு மாதமும் அறிமுகம் செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வெளியிட்டு, இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் ஐபோன்-5 ஸ்மார்ட்போனையும், ஐபேட் மினி டேப்லட்டை ஆகஸ்டு மாதமும் அறிமுகம் செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் தான் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது சாம்சங் நிறுவனம். இந்த சந்தோஷத்தில் இருந்தே இன்னும் வெளிவராத வாடிக்கையாளர்களுக்கு அடுத்த கொண்டாட்ட செய்தியும் காத்திருக்கிறது என்று கூறலாம். ஐபன் 4-எஸ் ஸ்மார்ட்போனின் மூலம் உலக அளவுல் பெரிய சாதனையை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனம், அடுத்ததாக ஐபோன்-5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய காத்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தை விட இந்த ஸ்மார்ட்போனை வாங்க வாடிக்கையாளர்கள் வெகுவாக காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 4.6 இஞ்ச் ரெட்டினா தொழில் நுட்பம் கொண்ட திரையினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு 4ஜி எல்டிஇ வசதியையும் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் பெறலாம் என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் 10 இஞ்ச் திரை கொண்ட ஐபேட் மினி டேப்லட்டினையும் வழங்கும் என்று தகவல்கள் காற்று வாக்கில் கசிந்துள்ளன.கடந்த ஆண்டு ஐபோன்-5 ஸ்மார்ட்போன் தான் வெளியாக இருந்தது. ஆனால் சில தாமதங்களினால், ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் ஆர்வத்தினை அதிகப்படுத்தி கொண்டே போகும் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலவரம் உண்மையாகிறதா? என்று பொருத்திருந்து பார்ப்போம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top