கேமரா உலகில் வெற்றி கொடி நாட்டி வரும் நிக்கன் நிறுவனம் ஒரு புதிய கேமராவை களமிறக்குகிறது. இந்த கேமரா டிஎஸ்எல்ஆர் வரிசையி்ல் வருகிறது. நிக்கன் டி5100 என்று அழைக்கப்படும் இந்த கேமரா 1080பி படங்களை எடுக்கும் திறன் கொண்டது.....கேமரா உலகில் வெற்றி கொடி நாட்டி வரும் நிக்கன் நிறுவனம் ஒரு புதிய கேமராவை களமிறக்குகிறது. இந்த கேமரா டிஎஸ்எல்ஆர் வரிசையி்ல் வருகிறது. நிக்கன் டி5100 என்று அழைக்கப்படும் இந்த கேமரா 1080பி படங்களை எடுக்கும் திறன் கொண்டது.
இந்த கேமராவின் முக்கிய பலம் இதன் சூப்பரான ரிசலூசன் மற்றும் ப்ராசஸிங் சக்தி ஆகும். இந்த கேமார ப்ளாஷ் வசதியுடன் வருகிறது. இதில் யுஎஸ்பி வசதி இருப்பதால் போட்டோக்களை கணினிகளுக்கு மிக எளிதாக பரிமாற்ற செய்ய முடியும். இந்த 16.2 எம்பி கொண்ட நிக்கன் கேமரா 4928 x 3264 ரிசலூசனைக் கொண்டு இருக்கிறது. மேலும் சிஎம்ஒஎஸ் சென்சார், எக்ஸ்பீட் 2 ப்ராசஸர், டிஎப்டி எல்சிடி மானிட்டர், அதிவேகம் கொண்ட ஷட்டர், ஜிபிஎஸ் வசதி, தூசுகளிலிருந்து பாதுகாக்கும் சென்சார், ஏர்ப்ளோ கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் நிக்கன் இஎன்-இஎல் 14 பேட்டரி போன்ற முக்கியமான அம்சங்களுடன் இந்த கேமரா வருகிறது. மேலும் இந்த கேமராவில் டிஜிட்டல் இமேஜ் ரொட்டேசன் செய்யும் வசதியும் உண்டு. அதுபோல் டிஸ்ப்ளே ப்ரைட்னஸ் கட்டுப்பாடு, மற்றும் இன் கேமரா ரெட் ஐ ரிமூவல் போன்ற வசதிகளும் இந்த கேமராவில் இருக்கின்றன. இதில் இருக்கும் டஸ்ட் டெலீட் டேட்டா சிஸ்டம் இதன் லென்சை தூசுகளிலிருந்து பாதுகாக்கிறது. இந்த நிக்கன் டி5100 கேமரா ஆடியோ பதிவிற்கான வசதியையும் வழங்குகிறது. இந்த கேமராவை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும். குறிப்பாக கைக்கு அடக்கமாக இருப்பதால் இதை வெளியில் எடுத்து செல்வதும் சுலபமாக இருக்கும். இந்த நிக்கன் புதிய கேமராவின் விலை ரூ.35000லிருந்து ரூ.40000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கேமரா விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக