புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இன்று அதிகாலை நடுரோட்டில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். உடலில்எரிந்துகொண்டிருந்த தீயை வாக்கிங் சென்றவர்கள் அணைத்தனர். பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை
செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் கம்பர் வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் நடுரோட்டில் ஏதோ ஒரு பொருள் மீது தீ எரிந்துகொண்டிருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். ஒரு பெண் தீயில் எரிந்துகொண்டிருந்தது தெரியவந்தது. அவரது உடல் அருகே மண்ணெண்ணெய் கேன் வைக்கப்பட்டிருந்தது. பதறியடித்த பொதுமக்கள் மண் மற்றும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

மகாலிங்கபுரம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீயில் கருகிய பெண் கரிக்கட்டையாகி இறந்து கிடந்தார். 30 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் பெயர் மற்றும் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரியவில்லை. தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு யாராவது இவரை எரித்து கொலை செய்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதிகாலையில் நடுரோட்டில் பிணமாக கிடந்ததால் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நடுரோட்டில் தீயில் எரிந்த நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top