புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உறவுக்காரர்களான இரு மாணவிகள் ஒரே தடவையில் அரலி விதை உட்கொண்டு;ள்ளனர். இவர்களில் ஒரு மாணவி யாழ்ப்பாணப் பாடசாலையில் கல்விகற்றுவரும் வேளையில் அப் பாடசாலையில் கட்டட வேலை மேற்பார்வை செய்து வந்த இளைஞனுடன் காதல் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

இவ்வாறு ஏற்பட்ட காதலை மாணவியின் பெற்றோர் அறிந்து மாணவியை வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்றல் நடவடிக்கைக்காக சேர்த்துள்ளனர். இருந்தும் அம் மாணவி கைத்தொலைபேசியை பாடசாலைக்குக் கொண்டு சென்று குறிப்பிட்;ட இளைஞனுடன் கதைத்து வந்துள்ளார்.

பாடசாலையில் கைத் தொலைபேசியை மாணவி பாவிப்பதை அறிந்த பாடசாலை அதிபர் கைத் தொலைபேசியை பறித்து வைத்திருந்து பெற்றோரை வரவழைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த மாணவி கொண்டு சென்ற கைத்தொலைபேசி அம் மாணவியில் ஒன்றுவிட்ட சகோதரியுடையது என தெரியவருகின்றது.

இந்த தொலைபேசி விவகாரத்தால் மாணவியின் ஒன்றுவிட்ட சகோதரி அரலிவிதையை உட்கொண்டதாகவும் இதனையடுத்து மற்றைய மாணவியும் அரலிவிதை உட் கொண்டதாகவும் தெரியவருகின்றது.

இருவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிக்pச்சைக்காக கண்டி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்றய தினம் இவர்கள் இருவரும் சுகமடைந்த நிலையில் பெற்றோருடன் வீடு திரும்பியுள்ளனர்.

நல்லூர் செட்டித்தெருவைச் சேர்ந்த மாணவியும் தாண்டிக்குளம் வவுனியாவைச் சேந்த மாணவியுமே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவர்களாவார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top