ஏற்கனவே தலைக்குமேல் சிக்கல்களை வைத்திருக்கும் Yahoo நிறுவனம், நேற்று தமது சி.இ.ஓ. பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அவர் பணியில் சோத்துக் கொள்ளப்பட்ட போது, போலியான கல்வித் தகுதியை காட்டியே பதவியைப் பெற்றிருந்தார் என்பதே குற்றச்சாட்டு.
Yahoo சி.இ.ஓவாக பணிபுரிந்த ஸ்காட் தாம்சன், இங்கு வருவதற்கு முன் PayPal நிறுவனத்தின் பிரெஸிடென்டாக இருந்தவர். கடந்த ஜனவரியில் யாகூ நிறுவனத்தின் தலைமைப் பதவிக்காக அவர் விண்ணப்பித்த போது, ஈஸ்டொன் பல்கலைக்கழகத்தில் (Massachusetts) கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அக்கவுன்டிங் பட்டப்படிப்பை (bachelor’s degree) பூர்த்தி செய்ததாக தமது résuméவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவர் குறிப்பிட்டிருந்தது பொய் என்பது கடந்த வாரம் தெரியவந்தது. ஈஸ்டொன் பல்கலைக்கழகம், அவர் அக்கவுன்டிங் பட்டப்படிப்பை மட்டுமே பூர்த்தி செய்தது என்பதை உறுதிப் படுத்தியது. இந்த விபரம் தெரியவந்த பின்னரும், யாகூ நிறுவனம், அவர் பதவியில் தொடர்வதை அனுமதித்தது.
நிறுவனத்துக்கு அவரது கல்வித் தகுதி முன்கூட்டியே தெரியும் எனவும், ஷேர் ஹோல்டர்களை சமாளிப்பதற்காகவே பொய்யான கல்வித் தகுதி காண்பிக்கப்பட்டது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தாம்சன் பதவியில் தொடர்வதற்கு ஷேர் ஹோல்டர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஷேர் ஹோல்டர்களின் ஆதரவை திரட்டிய டானியெல் லோப், தாம்சன் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று கடும் அழுத்தங்களை கொடுத்தார். யாகூவின் கணிசமான பங்குகளை வைத்துள்ள ஹேர் ஹோல்டர்களில் ஒருவரான டானியெல், Third Point என்ற hedge fund-ஐ சேர்ந்தவர். அமெரிக்க பிசினெஸ் வட்டாரங்களில் செல்லாக்கானவர்.
இந்த அழுத்தங்கள் உச்சத்துக்கு செல்லவே, தாம்சனை கழட்டி விடும் முடிவை நேற்று எடுத்தது யாகூ நிறுவனம். பதவிக்கு வந்து, 6 மாதங்கள் பூர்த்தியடையும் முன்னரே தாம்சன் வெளியேற்றப்பட்டுள்ளார். (அவரே வெளியேறியதாக நிறுவனம் அறிவித்துள்ளது) புதிய சி.இ.ஓவாக ராஸ் லெவின்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
(இந்த லெவின்சன் இன்டர்நெட் வர்த்தகத்தில் இருந்து வரவில்லை. இவர், மீடியா நிறுவனம் -News Corp- ஒன்றில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார்) இதில் மற்றொரு விவகாரமும் உள்ளது. தாம்சன் வெளியேறும் அறிவிப்பை வெளியிட்டுள்ள யாகூ, “நிறுவனத்தின் சேர்மன் ராய் பாஸ்டொக், தமது பதவியில் இருந்து வெளியேறவுள்ளார்” எனவும் அறிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக