கோடையையொட்டி பாபநாசம் தலையணையில் குளிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மதுரையில் இருந்து ஒரு ஜோடி தலையணைக்கு குளிக்க வந்தது. குளித்துக்கொண்டிருந்த போது திடீர் என்று அவர்கள் நிர்வாணமாக ஆட்டம் போட்டனர்.
அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தற்செயலாக இதை பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த ஜோடியை கண்டித்தனர். ஆனால் அதன்பிறகும் நிர்வாண குளியல் தொடர்ந்தது.
இதையடுத்து அருகில் நின்ற மற்ற சுற்றுலா பயணிகள் திரண்டு நிர்வாண குளியல் போட்ட ஜோடியை சூழ்ந்து விரட்டினர். இதுபற்றி சிங்கை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த ஜோடியை மடக்கி பிடித்து விசாரித்தனர். பின்பு அவர்களை உடனடியாக மதுரை செல்லுமாறு அறிவுறுத்தி கண்டித்து அனுப்பினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக