இங்கிலாந்தில் 93 வயது ஆமையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். ஆமையை பிரிந்து தவிக்கும் உரிமையாளர், ஆமையை கொடுத்து விடுங்கள், பரிசுத் தருகிறேன் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.இங்கிலாந்தின் எஸ்சக்ஸ் பகுதியில் உள்ள டன்மோவில் வசிப்பவர் ரெக்ஸ் காக்ஸ்டர்(வயது 74). இவருடைய மனைவி ஜேன். இவர்களுக்கு 7 பேரக் குழந்தைகள் உள்ளனர். இவர் செல்லமாக ஆமை ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு டிம்மி என்றும் பெயர் வைத்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் விடுமுறைக்காக அனைவரும் சுற்றுலா சென்று விட்டு மே 2ஆம் திகதி வீடு திரும்பினர். விட்டுப் போன இடத்தில் டிம்மியை காணவில்லை. வீடு முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. அதை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
மனம் நொடிந்து போன ரெக்ஸ், ஆமையை திருடியவர்கள் அதை திருப்பி தந்தால் பரிசு தருகிறேன் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: டிம்மியை இந்த வீட்டுக்கு கொண்டு வந்த போது எனக்கு வயது 11. அப்போது அவனுக்கு (ஆமை) 30 வயது. இப்போது அவனுக்கு 93 வயதாகிறது.
63 ஆண்டுகளாக அவனை பிரியாமல் வாழ்ந்து வந்தேன். இப்போது அவனை யாரோ திருடிவிட்டார்கள். நான் இல்லாமல் அவன் எப்படி உயிர் வாழ போகிறான் என்று பயமாக இருக்கிறது. அவனுக்கு வயதாகி விட்டது. அவனுக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். டிம்மி காணாமல் போனது என்னை விட என் பேர குழந்தைகளை அதிகம் பாதித்துள்ளது.
ஏனெனில், டிம்மியுடன் சேர்ந்துதான் அவர்களும் வளர்ந்து வந்தனர். திருடர்கள் அவனுக்கு சரியான நேரத்தில் ஆகாரம் கொடுக்கிறார்களா, பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. யார் திருடி சென்றிருந்தாலும், என் டிம்மியை திருப்பி கொடுத்து விடுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக