புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாட்டில் நிலவும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் இதுவரை 14 பேர் காணாமல் போயுள்ளதுடன் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் 82687 குடும்பங்களைச் சேர்ந்த 328913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

15589 குடும்பங்களைச் சேர்ந்த 56744 பேர் 174 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

1434 வீடுகள் முழுமையாகவும் 4782 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 

புத்தளம் குருநாகல் உள்ளிட்ட வட மேல் மாகாணத்தில் இதுவரை 15694 குடும்பங்களைச் சேர்ந்த 60403 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 பேர் பலியாகியுள்ளனர். 9933 குடும்பங்களைச் சேர்ந்த 36561 பேர் 60 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளடங்கிய கிழக்கு மாகாணத்தில் 54685 குடும்பங்களைச் சேர்ந்த 211775 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மூவர் பலியாகி நால்வர் காணாமல் போயுள்ளனர். 2340 குடும்பங்களைச் சேர்ந்த 8237 பேர் 41 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மாத்தளை, கண்டி, நுவரெலியா உள்ளடங்கிய மத்திய மாகாணத்தில் இதுவரை 2046 குடும்பங்களைச் சேர்ந்த 7154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் பலியாகி 8 பேர் காணாமல் போயுள்ளனர். 615 குடும்பங்களைச் சேர்ந்த 2437 பேர் 27 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top