நடிகை பூஜா காந்திக்கும், தொழிலதிபர் ஆனந்துக்கும் நடக்கவிருந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் முறிவுற்றது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கட்சியில் இணைந்திருந்த நடிகை பூஜா காந்திக்கும், பெங்களூரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர்
ஆனந்துக்கும், கத்திரிகுப்பேயில் உள்ள பூஜா காந்தி வீட்டில் நவம்பர் 15ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
விரைவில் திருமணம் நடக்கும் என்று இரு வீட்டாரும் கூறியிருந்தனர். திருமணத்துக்கு தேவையான ஏற்பாடுகளை இரு வீட்டினரும் செய்து வந்தனர். இந்நிலையில் பூஜா காந்தியின் திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது.
இதுகுறித்து பூஜா காந்தி கூறுகையில், ஆனந்துடன் செய்யப்பட்ட என் திருமண நிச்சயதார்த்தத்தை ரத்து செய்து விட்டேன். எங்கள் குடும்ப பழக்க வழக்கங்களுக்கும், கலாச்சாரத்துக்கும் ஆனந்தின் குடும்பம் ஒத்துவராது.
அவரை, தவறாக என் கணவராக நிச்சயம் செய்து விட்டேன். இதற்காக நானும், என் குடும்பத்தினரும் வருந்துகிறோம். அவரை பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் தற்போது தெரிய வந்ததால் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கு பதிலளித்து ஆனந்த் கூறுகையில், நடிகை பூஜா திருமணத்தை நிறுத்தவில்லை. நான் தான், திருமணத்தை நிறுத்தினேன். நடிகை பூஜாவின் தாயார், பணத்துக்காக எதையும் செய்பவர்.
தவறான குடும்பத்தில் சம்பந்தம் வைத்து கொள்ள நினைத்தது எங்களின் தவறு. எங்கள் குடும்பத்தினர் பூஜாவின் குடும்பத்தினரை பற்றி தவறாக எதுவும் கூறவில்லை.
ஆனால், பூஜாவின் தாயார் எங்களை பற்றி தவறாக பேசியுள்ளார் என்றும் இதனால், நானே திருமணத்தை நிறுத்திவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக