சென்னை: கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரின் கார் டிரைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் நேற்று மதியம் கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த செய்தியைக் கேட்ட நித்யஸ்ரீ விஷத்தைக் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். இந்நிலையில் மகாதேவனின் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நித்யஸ்ரீ மகாதேவனை மணந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக மகாதேவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக நித்யஸ்ரீ வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று கூறப்படுகிறது. மகாதேவன் பல்வேறு சமயத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பாராம். இந்த தகவல் அவரின் கார் டிரைவர் சுரேஷிடம் நடத்திய விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து சுரேஷ் கூறுகையில், காரில் செல்கையில் மகாதேவன் திடீர் என்று கை, கால்களை ஆட்டுவார், சத்தம் போடுவார். காரை நிறுத்தச் சொல்லி எந்த இடம் என்றும் பார்க்காமல் சிறுநீர் கழிப்பார். நான் தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்வேன்.
சபரிமலைக்கு சென்றதால் நேற்று காலை 11 மணிக்கு தான் வேலைக்கு சென்றேன். அவரது வீ்ட்டுக்கு சென்றவுடன் காரில் ஏறிக் கொண்டு போட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். நானும் அழைத்துச் சென்றேன். அங்கு அவரின் மகள்கள் டென்னிஸ் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை சந்தித்து மாலையில் பயிற்சி உள்ளதா என்று கேட்டுவிட்டு காரில் கிளம்பினார்.
அப்போது என்னை முன் சீட்டில் அமர வைத்துவிட்டு அவர் காரை ஓட்டினார். கோட்டூர்புரம் பாலத்தில் அவர் காரை நிறுத்தியதும் வழக்கம் போல சிறுநீர் கழிகக்த் தான் செல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் ஆற்றில் குதித்துவிட்டார் என்றார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மகாதேவன் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். ஆனால் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று நித்யஸ்ரீ தெரிவித்துள்ளார். மகாதேவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவர் தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக