திருச்சி மாவட்டம் மணப்பாறை துவரங்குறிச்சி அருகேயுள்ள பில்லுப் பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (45). இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஸ்வீட் ஸ்டாலில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த மாலா (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மாலா ஏற்கனவே 2 திருமணம் செய்தவராம்.
இவர்கள் மணப்பாறை கைகாட்டி அருகேயுள்ள மேட்டுப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். அழகர்சாமி அங்கிருந்து எடமலைப்பட்டி புதூருக்கு வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வீட்டில் இருந்து வந்த மாலாவுக்கும் வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் மகன் கார்த்திக் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கார்த்திக் விராலிமலையில் உள்ள என்ஜீனியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4 ந்தேதி மாலாவையும், கார்த்திக்கையும் காணவில்லை. கார்த்திக் தந்தை ராஜேந்திரன் மகனை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து தனது மகனை மாலா கடத்தி சென்று விட்டதாகவும், மகனை கண்டு பிடித்து தரக்கோரியும் வளநாடு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுருளியாண்டி, எஸ்.ஐ. அப்துல் ரஹீம் ஆகியோர் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் மாலாவின் 3வது கணவரான அழகர்சாமி ஒன்றரை வயது குழந்தையுடன் தவித்து வருகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக