விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலிருந்து சூர்யா விலகிவிட்டார். அவருக்குப் பதில் அந்த ஷோவை நடத்துகிறார் பிரகாஷ் ராஜ். இதன் பின்னணி சூர்யா கால்ஷீட் பிரச்சினை இல்லை...தொடர்ந்து அவர் நடித்த படங்கள் விழுந்ததுதான் என்கிறார்கள்.
இந்த ஆண்டு அதிகம் கவனிக்கப்பட்ட மற்றும் விமர்சிக்கப்பட்ட டிவி ஷோக்களில் ஒன்று நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. பார்வையாளர்களை ஈஸியாக ஈர்க்க எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்கிற ரேஞ்சுக்கு கேள்வி கேட்டு வந்தார் சூர்யா. இந்த நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்புதான் முடிந்தது. இதன் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என விஜய் டிவிக்காரர்கள் விளம்பரம் செய்து வந்தனர்.
இதிலும் சூர்யாதான் நிகழ்ச்சி நடத்துநராக வருவார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், அவருக்கு பதில் பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சியை நடத்துகிறார். இதுகுறித்து சூர்யாவிடம் கேட்டபோது, "என்னிடம் தேதியில்லை. அதனால்தான் நான் வெளியில் வந்துவிட்டேன். மற்றபடி கடந்த முறை ரொம்ப என்ஜாய் பண்ணி அந்த நிகழ்ச்சியை நடத்தினேன்," என்றார்.
ஆனால் உண்மையில், இந்த நிகழ்ச்சி மூலம் சினிமா ரசிகர்களுக்கு சூர்யா போரடித்துவிட்டார் என்பதே உண்மை. அவரது இரண்டு படங்கள் அடுத்தடுத்து மண்ணைக் கவ்வின. முக்கியமாக மாற்றான் தோல்வி சூர்யாவுக்கு பெரிய அடி. ஒரு பெரிய ஹீரோ டிவியில் நேரடியாக தினமும் தோன்றிக் கொண்டே இருந்தால் மக்கள் மத்தியில் மவுசு குறைந்துவிடும் என்பது திரையுலகில் அடிக்கடி பேசப்படும் விஷயம். அது புரிந்துதான் சூர்யா விலகிவிட்டார் என்கிறார்கள்!
விஜய் டிவியில் சூர்யாவுக்கு நடந்தது என்ன?

0 கருத்து:
கருத்துரையிடுக