தாயால் கைவிடப்பட்டு தந்தையால் கற்பழிக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மும்பையைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஆஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது தாய்
வேறு ஒருவரை மணந்து கொண்டு சென்றுவிட்டார்.
ஆஷா தனது தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி பக்கத்து வீட்டு இளம்பெண் ஆஷாவின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஆஷாவை அவரது தந்தை பலாத்காரம் செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதைப் பார்த்த அந்த நபர் பக்கத்து வீட்டு பெண்ணை மிரட்டி அனுப்பிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து அந்த பெண் மறுபடியும் வந்து பார்த்தபோது குழந்தைக்கு ரத்துபோக்கு ஏற்பட்டதைப் பார்த்து அதை குளிப்பாட்டி போலீசாரிடம் கொண்டு சென்றார்.
இதையடுத்து போலீசார் குழந்தையின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் குடிப்பழக்கமும், போதைமருந்து பழக்கமும் உள்ள அவர் தனது மகளுக்கு மது கொடுத்து குழந்தையின் கண்களை துணியால் கட்டியுள்ளார். மது மயக்கத்தில் இருந்த குழந்தையை அவர் கற்பழித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆஷாவுக்கு இதுவரை 2 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மூன்றாவது அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் குழந்தையை எங்கு அனுப்புவது என்பது குறி்தது குழந்தைகள் நலக் கமிட்டி முடிவு செய்யும்.
0 கருத்து:
கருத்துரையிடுக