புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவான அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர்
சின்னாண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (38), பழைய இரும்பு வியாபாரி.

மனைவி கிருஷ்ணவேணி (23). இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. கிருஷ்ணவேணியின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் நாமக்கல்லில் உள்ள அண்ணன் கார்த்திகேயன் வீட்டில் வளர்ந்தார்.

வீரமணி எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவாராம். வீட்டுக்கு போனில் யாராவது பேசினால் அவர் யார், அவருக்கும் உனக்கும் என்ன உறவு, உன் சித்தி வீட்டுக்கு ஏன் போகிறாய், அண்ணன் வீட்டுக்கு ஏன் போனாய் என கேள்விகளால் மனைவியை துளைத்தெடுப்பார்.

இதனால் தினமும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, வீரமணியின் பெற்றோர் அவரை சில தினங்களுக்கு முன்பு தனிக்குடித்தனம் வைத்தனர். அங்கும் சண்டை ஓயவில்லை. இதனால் கிருஷ்ணவேணி கோபித்துக்கொண்டு அண்ணன் வீட்டுக்கு போய்விட்டார்.

உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை கிருஷ்ணவேணியை கரூரில் வசிக்கும் அவரது சித்தி வரதலட்சுமி, போனில் தொடர்பு கொண்டார். போனை யாரும் எடுக்காததால் நேரில் வந்து பார்த்தார்.


வீடு வெளிப்பக்கமாக பூட்டி கிடந்தது. வீட்டுக்குள் கழுத்து, தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணவேணி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு வீரமணி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, வீரமணியை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top