யக்கலமுல்ல - நாக்கியாதெனிய - நாவல பகுதியில் 70 வயது நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மகன்
மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்த பின் உடலின் பாகங்கள் சிலவற்றை தேயிலை செடி காண் ஒன்றில் மண்ணிட்டு புதைத்துள்ளமையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
உடலின் தலைப்பகுதி கைவிடப்பட்ட மலசலகூடம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்த நபரின் மகன் என்பதோடு மற்றையவர் மகளுடைய கணவன் என தெரியவந்துள்ளது.
காலி குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக