புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சங்ககிரி அருகே பூமியில் பிளவு ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் பிளவு ஏற்பட்ட பகுதியை நூற்றுக் கணக்கான மக்கள் பார்த்து செல்கின்றனர்.





நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களின் எல்லைப் பகுதியான இருகாளூர், அரியாம்பாளையம் பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான பகுதி உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை உள்ளது. இப்பகுதியில் பூமியில் நேற்று காலை திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு பென்சில் நுழையும் அளவிற்கு அகலத்துடனும் இரண்டு அடி ஆழத்துடனும் காணப்படும் இந்த பிளவு சுமார் 60 அடி தூரத்திற்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது.ரயில் பாதையிலிருந்து பத்தடி தூரத்திற்கு இப்பிளவு ஏற்பட்டுள்ளது.அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் இந்த பிளவினை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வேகமாக தகவல் பரவியதை அடுத்து பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் இப்பகுதிக்குச் சென்று பிளவினை பார்த்துச் செல்கின்றனர். சிலர் தங்களது செல்போன்களில் பதிவு செய்து தங்களது கற்பனைக்கேற்ப தகவல்களை பரப்பியதால் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டது. 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top