மனைவியை அடுத்தவனுடன் பார்த்தால் வெட்டிப்போடும் கணவர்கள் இருக்கிறார்கள். எக்கேடோ கெட்டுப்போ என்று தண்ணீர் தெளித்து விடும் கணவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால் அடுத்தவனை நினைத்துக்கொண்டு அம்மாவின் வீட்டில் இருக்கும் மனைவி மனம் திருந்தி வருவாள் என்று மரத்தின் மீது காத்துக்கொண்டிருக்கிறார் ஒரு கணவர
இந்தியாவில்தான் இந்த அதிசய கணவர் வசித்து வருகிறார். ஒன்பது மாதங்களாக, மரத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வரும் அந்த அதிசய கணவரைப் பார்க்க, ஏராளமானோர் வந்த வண்ணமாக உள்ளனர்.
எனினும், அவரது மனைவி மட்டும் மனம் மாறவேயில்லை. அந்த அதிசய கணவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.
வாரணாசி டூ மும்பை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள ராம்காவ் என்ற இடத்தை சேர்ந்தவர், சஞ்சய், 25. இவர் மனைவி, தாரா, 22. சஞ்சய்க்கு, வாரணாசியில் வேலை சரிவர கிடைக்காததால், மனைவி தாராவுடன், மும்பை சென்றார். அங்கு கிடைத்த வேலையை பார்த்துவிட்டு இரவில் வீடு திரும்புவார் சஞ்சய்.
பக்கத்து வீட்டுக்காரருடன்..
ஒரு நாள் வேலை பார்த்துவிட்டு வழக்கமாக வரும் நேரத்திற்கு முன்னதாகவே, வீடு திரும்பினார் சஞ்சய். கதவை திறந்தவருக்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவி தாரா, பக்கத்து வீட்டு வாலிபருடன், படுக்கையில் இருந்தார்.
இந்த செயலால் மனம் நொந்த சஞ்சய், தாராவை கண்டித்தார். பின்னர் மும்பையை விட்டு மனைவியுடன் சொந்த ஊரான வாரணாசி திரும்பினார்.
அங்கு சென்ற பிறகும், தம்பதிக்குள் சந்தோசம் இல்லை. அம்மா வீட்டில் வாசம் மும்பை வாலிபரின் நினைவாகவே, தாரா இருக்கவே அவளின் தாய் வீட்டில் விட்டு வந்த சஞ்சய், மனைவி மனம் மாற வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆனாலும் தாராவின் மனம் மாறவில்லை. மரத்தில் ஏறிய சஞ்சய் இதனால் கோபம் கொண்ட சஞ்சய், அவர்கள் வசிக்கும் ஊரின் வெளிப்பகுதியில் இருந்த, மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
மரத்தை விட்டே கீழே இறங்குவதில்லை. சாப்பிடுவதும் உறங்குவதும் கூட மரத்தில்தான். இதனை அறிந்த சஞ்சயின் உறவினர்கள், அவர் மனைவி, தாராவிடம் பேசிப்பார்த்தனர். அவளும் மனம் மாறவில்லை;
சஞ்சயும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
ஒன்பது மாத போராட்டம்.
மார்ச், 9ம் தேதி, மரத்தில் ஏறிய சஞ்சய், ஒன்பது மாதங்களாக, தன் போராட்டத்தை கைவிடவில்லை. ஆட்கள் யாரும் அருகில் இல்லாத நேரத்தில், மரத்திலிருந்து கீழே இறங்கி, உபாதைகளை கழித்துவிட்டு பிறகு ஏறி உட்கார்ந்து கொள்கிறார்.
வலுக்கட்டாயமாக யாராவது தன்னை இறக்க முயன்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டுகிறார். அவரது போராட்டம் ஒன்பது மாதமாக தொடர்கிறது.
குவியும் கூட்டம்
மனைவி மனம் திருந்த வேண்டி, மரத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வரும் சஞ்சயை பார்க்க, ஏராளமானோர் வந்த வண்ணமாக உள்ளனர்.
எனினும், அவர் மனைவி தாரா மட்டும் மனம் மாறவேயில்லை. மும்பை வாலிபனை மறந்துவிட்டு தனக்காக போராட்டம் நடத்தும் கணவனை சமாதானப்படுத்தாமல் தன் தாய் வீட்டில் தனித்தே வாழ்கிறாள் தாரா.
0 கருத்து:
கருத்துரையிடுக