புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மும்பை, அக்குர்லி பகுதியை சேர்ந்த 14 வயது இளம்பெண், கடந்த சனிக்கிழமை மாலை, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரியை காண தாயாருடன் சென்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சகோதரியுடன்
அன்றிரவு தாயார் தங்கிக்கொள்ள நேர்ந்ததால், அந்த இளம்பெண் மட்டும் தனியாக வீட்டுக்கு சென்றார்.

இரவு வேளையில் வீட்டுக்கு போகும் பாதையை தவற விட்டு, வழி தெரியாமல் தவித்த அந்த இளம்பெண்ணுக்கு, நெருல் பகுதியை சேர்ந்த குப்பை பொறுக்கும் பெண் ஒருவர், தன் வீட்டில் அடைக்கலம் தந்தார். மறுநாள் அதிகாலை, அந்த பெண் வழக்கம் போல், குப்பை பொறுக்கும் தொழிலுக்கு சென்று விட்டார்.

வழிதவறி அங்கு வந்து சேர்ந்த இளம்பெண் மட்டும் அந்த வீட்டில் தனியாக இருந்தார். இதை அந்த பகுதியில் வசிக்கும், ராஜு கம்ப்ளே (28) என்ற குப்பை பொறுக்கும் தொழில் செய்பவன் அறிந்துக் கொண்டான். வீட்டுக்குள் நுழைந்த அவன், அந்த இளம்பெண்ணை கதறக்கதற கற்பழித்து நாசப்படுத்தினான்.

மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியும் உள்ளான். அங்கிருந்து தப்பியோடி வந்த இளம்பெண், அந்த பகுதியில் வசிக்கும் தோழியின் மூலம் பெற்றோருக்கு போன் செய்து, நடந்த சம்பவத்தை கூறி அழுதாள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெற்றோர், அந்த பெண்ணை அழைத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
Top