இரவு வேளைகளில் வீடுகளுக்குள்ளும் வீட்டு வளாகங்கத்திற்குள்ளும் புகுந்து பெண்களின் ஆடைகளை திருடிவந்த ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மணல் அகழ்வில் ஈடுபடும் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். தூங்குவதற்காக பெண்களின் ஆடைகளை அவர் திருடிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான 10 சம்பவங்களுடன் தொடர்புடைய நபரையே இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் பெண்களின் ஆடைகளை மட்டுமே திருடிவந்துள்ளதாகவும் வேறு எந்தவொரு பொருட்களையும் அவர் திருடவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.