மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்துக்கு 2 பேர் பலியாகி உள்ளனர், பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
மலேசியாவில் நான்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்வதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
இம்மழைக்கு 2 பேர் பலியாகி உள்ளதுடன், 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
பகாங் மாகாணத்தில் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால், பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.