புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திறமையான நடிகைகளுக்கு கொலிவுட்டில் மதிப்பில்லை என கூறியுள்ளார் சுனைனா.
கொலிவுட்டில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், நீர்ப்பறவை தான் சுனைனாவுக்கு நல்லதொரு பெயரை வாங்கி கொடுத்தது.

இனிமேல், தனக்கு அதிகளவில் வாய்ப்புகள் வரும் என நினைத்து கொண்டிருந்த சுனைனாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இதுகுறித்து அவர் கூறுகையில், திறமையான நடிகைகளுக்கு கொலிவுட்டில் மரியாதை கிடைக்கும் என்று நினைத்திருந்தேன்.

அதற்கேற்றாற் போல் வாய்ப்பு அமைந்தும், நல்ல நடிகையாக முத்திரை பதித்தும் ஒரு படம் கூட கிடைக்காதது வேதனையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களை பொறுத்தவரை நடிகைகள் திறமையை வெளிப்படுத்துவதை விட, உடம்பை வெளிப்படுத்தி நடித்தால் தான் மதிப்பார்கள் போல் தெரிகிறது.

அதனால் நானும் கிளாமரான கதாபாத்திரங்களை தெரிவு செய்து, நடித்து பணம் சம்பாதிக்க போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Top