புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஓய்ந்த பாடில்லை. நியூயார்க் நகரில் தீயை அணைக்க தாமதமாக வந்ததற்காக இரு தீயணைப்பு வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கனெக்டிகட்டில் நியூடவுன்
பள்ளியில் புகுந்த மர்ம நபர் 20 குழந்தைகள் உள்பட 27 பேரை சுட்டு கொன்றான். அதன் பின்னர் வணிக வளாகத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் நியூயார்க் நகரில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் அங்கு வர கால தாமதமானது.

இதனால் தீ அருகே இருந்த மற்றொரு வீட்டுக்கும் பரவியது. இந்நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து சேர்ந்தனர். அப்பொழுது ஒருவர் திடீரென அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார்.

அதில் 2 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

துப்பாக்கியால் சுட்ட நபர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமது பாட்டியை சுட்டுக் கொன்றவர் என தெரியவந்துள்ளது.
 
Top