காதலிப்பது உண்மைதான், அவர் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்கிறார் சமந்தா.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் ஒருவரை காதலித்து வருகிறேன். எங்கள் இடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது.
மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், அதே நேரம் அடிக்கடி சந்திப்பது, வெளியே சுற்றுவது என்ற நிலையில் எங்கள் காதல் இல்லை.
ஆனால் காதலிப்பவர் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன். காரணம் எங்கள் திருமணத்துக்கு இன்னும் காலம் இருக்கிறது.
சினிமாவில் மேலும் பிரபலமாக வேண்டும், அதிகம் சாதிக்க வேண்டும்.
என்னை பற்றி வரும் வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, நடக்க போவதை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளா