புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கால் ஊனமுற்ற தாயின் சுற்றுலா செல்லும் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரை சக்கர நாற்காலியில் அமரச்செய்து சுமார் 3500 கிலொமீற்றர் வரை நடந்து தாயின் ஆசையை நிறைவேற்றிய மகனொருவன் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.


சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் கியூ மின்ஜூன். இவர் பிறவியிலேயே பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். எனவே, கால் ஊனமுற்ற இவரால் நடக்க முடியாது.

இவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் விவாகரத்து செய்து விட்டார். கியூ மின்ஜுனுக்கு பான்மெங் (வயது 26) என்ற ஒரே மகன்.

வீட்டுக்குள்ளேயே சக்கர நாற்காலியில் முடங்கி கிடந்த கியூமின்ஜுனுக்கு ஸ்ஷ யாங் பானா என்ற சுற்றுலா நகருக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஏனெனில் அந்த நகரை பற்றி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து வைத்திருந்தார். அந்த ஆசையை தனது மகனிடம் தெரிவித்தார். உடனே பான்மெங் தனது தாயாருக்கு வெளி உலகத்தை காட்ட விரும்பினார். அதற்காக வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து சென்று ஒவ்வொரு நகரமாக சுற்றிக்காட்ட முடிவு செய்தார்.

அதன்படி தனது தாயாரை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளியபடியே தனது பயணத்தை கடந்த ஜூலை 11ஆம் திகதி ஆரம்பித்தார். சுமார் 100 நாட்களாக தனது தாயருடன் சுமார் 3500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றார்.

அப்போது அவர் தனது தாயாரை நெடுஞ்சாலை வழியாக ஹெபி, ஹெனான், ஹபே, ஹனான், குய்ஷோ மற்றும் யுனான் ஆகிய மாகாணங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார். இரவில் வீதியோரம் கூடாரம் அமைத்தும், மலிவான ஹோட்டல்களில் தங்கியும் பொழுதைக் கழித்தனர்.

100 நாட்கள் தொடர்ந்த இந்த சுற்றுலாவுக்காக ரூ.70 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே ஸ்யாங் பான்னா சென்ற இந்த தாய் மகனை நகர மக்கள் ஆடல், பாடலுடன் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். கால் ஊனமுற்ற தாயின் சுற்றுலா ஆசையை நிறைவேற்றிய பான்மெங்கை பாராட்டியுள்ளனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top